🔴LIVE: உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் மகா கும்பாபிஷேகம்!

🔴LIVE: உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வீற்றிருக்கும் சித்தி விநாயகர், ஆதிரேஸ்வரர், வீரஆஞ்சநேயர், கதிர்வேல கந்தன், தர்ம சாஸ்தா ஐய்யப்பன், கால பைரவர், முனியாண்டி, கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி கடந்த 20-ந்தேதி மங்கல இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை ஆரம்பமானது. அன்று இரவு 8 மணி அளவில் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால, நான்காம் கால யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை யாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்ற உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!