கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பெற தண்ணீர், நீர் மோர் பந்தல்களை அமைத்திட வேண்டும் என கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன், “கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இன்னும் போகப்போக வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நல்நெஞ்சங்களின் நிறைந்திருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும், நீர்மோர் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் இருக்கின்ற கழக நிர்வாகிகளும் உடன் பிறப்புகளும் மேற்கொண்ட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாதசாரிகளும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு உதவியாக அமைந்திட வேண்டும். அதற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன். மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்து அதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமமுகவினர் தண்ணீர் பந்தல்களில் திறந்து நீர்மோர் தர்பூசணி பழம் போன்ற குளிர்ச்சி பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர்.

அந்த வரிசையில் இன்று மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் கிழக்கு ஒன்றியம் கழகம் சார்பில் கூத்தியார்குண்டு பகுதியில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மண்டல பொறுப்பாளரும்,கழக தலைமை நிலைய செயலாளரும்,மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.மகேந்திரன் அவர்களும்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும்,கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான கா.டேவிட் அண்ணாதுரை பி.ஏ.பி.எல் அவர்களும்,
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஜீவிதா நாச்சியார் அவர்களும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு விதமான குளிர்பானங்களை வழங்கினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் குளிர்பானத்தை அருந்திவிட்டு கோடை வெயிலில், தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரவியகண்ணன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.