மறைந்த தனது அப்பா முரளியின் 60வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அதர்வா- அழகிய புகைப்படங்கள்

நடிகர் முரளி

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி.

பின் பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டிவீரன், ஈட்டி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரியஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களில் நடிப்பதை தாண்டி கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

கடைசியாக நடிகர் அதர்வா நடித்திருக்கும் DNA படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

மறைந்த தனது அப்பா முரளியின் 60வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அதர்வா- அழகிய புகைப்படங்கள் | Atharvaa Celebrates His Father Murali Birthday

முரளி பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் முரளி. நிறைய சிறந்த படங்களில் நடித்துள்ள முரளி அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் முரளியின் 60வது பிறந்தநாளை (மே 19) அவரது குடும்பம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!