வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை? வேறு யார் தெரியுமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சிவகார்த்திகேயன் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை? வேறு யார் தெரியுமா | Varuthapadatha Valibar Sangam 2 Hero Update

பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி, ஸ்ரீ திவ்யா, சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைத்திருந்தார். மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் சிவகார்த்திகேயனுக்கு இன்று வரை அடையாளமாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு பதில் இவரா

இந்த நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை? வேறு யார் தெரியுமா | Varuthapadatha Valibar Sangam 2 Hero Update

ஆனால், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை என்று கூறுகின்றனர். அவருக்கு பதிலாக இப்படத்தில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவரான கவினை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை? வேறு யார் தெரியுமா | Varuthapadatha Valibar Sangam 2 Hero Update

லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் கவினுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 தமிழ் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!