விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்புகள் படு வேகமாக நடந்து முடிந்துவிட்டது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன் மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வர வரும் செப்டம்பர் 5ம் தேதி இப்படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் படத்தின் வியாபாரம் குறித்தும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

பட பாடல்கள்
விஜய்யின் கோட் படத்திற்கு இசையமைத்து வருவது யுவன் ஷங்கர் ராஜா தான்.
ஏற்கெனவே முதல் சிங்கிள் வெளியாகி பட்டய கிளப்பியது, தற்போது அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜாவிடம் கோட் பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இந்த படத்தின் இரண்டு பாடல்களில் விஜய் பாடியிருப்பதாக கூறியுள்ளார்.
ஒரு படத்தில் இரண்டு பாடல்களை விஜய் பாடியிருப்பது இதுவே முதல்முறை. இந்த விஷயம் கேட்டதும் அங்கே இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.