தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். இப்படம் குறித்து அறிவிப்பு வெளிவந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு துவங்கவில்லை.

வெற்றிமாறனுக்கும் சூர்யாவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது அதனால் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது என ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜய்யின் கோட் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… கூச்சலிட்ட மகிழ்ந்த ரசிகர்கள்
இதுகுறித்து வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பியபோது, படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், வாடிவாசல் படம் குறித்து பிரபல இயக்குனர் வசந்தபாலன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

முதல் இயக்குனர் இவரா
இதில் “வாடிவாசல் படத்தை முதன் முதலில் இயக்கவிருந்தது வெற்றிமாறன் இல்லை, இயக்குனர் லிங்குசாமி தான். அந்த படத்திற்கு நான் திரைக்கதை எழுதவிருந்தேன். ஆனால், ஜல்லிக்கட்டை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி திரைக்கதை அமைக்க முடியும் என சந்தேகம் இருந்தது. அதன்பின் அது சரியவரவில்லை என கைவிட்டோம். இன்று தமிழ் சினிமா பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படமாக மாறியுள்ளது” என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.