‘ஆஸ்கர்’ லைப்ரரியில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைக்கதை!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்தப் படம் ‘பார்க்கிங்’. ‘பலூன்’ இயக்குநர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.

பார்க்கிங் பிரச்சினையை பற்றி பேசிய இப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு தங்கக் காப்பு பரிசளித்தார்.

இந்நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ படத்துக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையானது ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகாடமி ‘பார்க்கிங்’ திரைக்கதை கேட்டு வாங்கி தனது நூலகத்தில் வைத்துள்ளது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், “ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடிப்போகும்” என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!