மதுரை விமான நிலையம் அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி விபத்து; அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

மதுரை : திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு வெங்காயம் லோடு 3 டன் ஏற்றிச் சென்ற லாரி மதுரை நான்கு வழி சாலையோர தடுப்பில் மோதி விபத்து. லாரியை TN 57 BT 6268 டிரைவர் சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். லாரி விமான நிலையம் அருகே நான்கு வழி சாலையில் வலைவின் போது கட்டுபட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரி கவிழ்ததால் வெங்காயங்கள் மொத்தமாக சாலையில் சிதறி கிடந்தன. லாரியை ஒட்டி வந்த டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு போன் செய்து லாரியை அகற்றி மற்றும் சாலை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!