விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா சாய் பல்லவி.. உண்மை இதுதான்

சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா சாய் பல்லவி.. உண்மை இதுதான் | Sai Pallavi About Vijay Ajith Movies

இவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி பேட்டி

நடிகை சாய் பல்லவிக்கு அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததாகவும், அப்படங்களில் தனக்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் தகவல் ஒன்று பரவியது.

விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா சாய் பல்லவி.. உண்மை இதுதான் | Sai Pallavi About Vijay Ajith Movies

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவை அனைத்துமே வதந்தி தான் எதுவுமே உண்மையில்லை என தெளிவாக கூறியுள்ளார். அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க தனக்கு எந்த ஒரு வாய்ப்பு தேடி வரவில்லை என சாய் பல்லவி கூறியது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!