
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்!
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சோந்த 4 போ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை அனுப்பானடி அம்பேத்கா் நகரைச் சோந்தவா் செந்தில்குமாா் (40).
இவா் கல்லூரியில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி வீரசெல்வி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். இவா்களது மகள்கள் தனுஸ்ரீ (13) எட்டாம் வகுப்பும், மேகாஸ்ரீ (8) நான்காம் வகுப்பும் படித்து வந்தனா். இந்த நிலையில், மதுரை சிலைமான் அருகே வைகை ஆற்றுப் பாலத்தின் அடியில் உள்ள மரத்தில் செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த சிலைமான் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அப்போது, சடலத்தின் அருகே செந்தில்குமாா் எழுதியிருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. தனக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. செந்தில்குமாா் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி வீரசெல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வீரசெல்வி, தனது இரு மகள்களுடன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீஸாா் அங்கு சென்று மூவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவா்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.