
இந்த மாதிரி முடிவு எல்லாம் எடுக்க வேண்டாம் … நான் நேரில் வருகிறேன் … ஜெராக்ஸ் மிஷின் விற்பனையாளர் கிணற்றில் சடலமாக மீட்பு … போலீசார் விசாரணை!
மதுரை பெத்தானியபுரம் பகுதியைச் சேர்ந்த ஜூலியஸ் பிரபாகர் வயது56. இவர் பிரிண்ட் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் 6 மாவட்டத்திற்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமம் கச்சிராயிருப்பு பிரிவு அருகில் தோட்டம் உள்ளது. இங்கு உள்ள தோட்டத்தை அடிக்கடி பார்க்க வருவது இவரது வழக்கம் அப்பொழுது மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த அழகு பிள்ளை என்பருடன் நட்பு ஏற்பட்டது.

இதே போல் இன்று காலை ஜூலியஸ் பிரபாகர் மனசு சரியில்லை என்று இவரது தோட்டத்தின் அருகே உள்ள முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது நண்பர்அழகு பிள்ளைக்கு போனில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அழகு பிள்ளை இந்த மாதிரி முடிவு எல்லாம் வேண்டாம் நான் நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு விரைவாக சம்பந்தப்பட்ட கிணற்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்த போது கிணற்றுக்குள் ஜூலியஸ் மூழ்கி விட்டதாக தெரிகிறது இதனால்அழகு பிள்ளை காடுபட்டி காவல் நிலையம் மற்றும்சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் காடுபட்டி ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கிணற்றிற்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து ஒரு மணி நேரம் ஆனதால் ஜூலியஸ் பிரபாகர் நீரில் மூழ்கி கிணற்றுக்கு அடியில் சென்று விட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தற்கொலை செய்து கொண்ட ஜூலியஸ் உடலை மேலே கொண்டு வந்து
காடுபட்டி போலீஸ் ஏட்டு மாரியப்பனிடம் ஒப்படைத்தனர்.
பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.