
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடினார். ஓபிஎஸ் உள்ளிட்டவர்களும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர் மீது வெறித்தனமான பக்தி கொண்டவர்கள்.
ஜெயலலிதாவை, தொலைவில் நின்று தரிசிப்பதே பாக்கியம் என்று கருதுபவர்கள். அவரை நேரில் சந்தித்தால் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் உடையவர்கள். அவர் தற்போது இல்லை என்றாலும் தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதா வடிவ கேக் இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலரையும் வியக்க வைக்கும் வகையில் மதுரையில் திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் சார்பில், ஜெயலலிதாவின் உருவம் கொண்ட 300 கிலோ எடையுள்ள கேக் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆறரை அடி உயரம் கொண்ட ஜெயலலிதா உருக கேக் சிலை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட கேக்கின் அருகே நின்று அதிமுகவினர் பலரும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இதனை அறிந்த பிற அரசியல் கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும், முன்னாள் எம்.எல்.ஏ மதுரை சரவணன் ஜெயலலிதா அவர்களின் உருவத்தில் பிரம்மாண்ட கேக் தயார் செய்து அதிமுகவினரின் மனதை வெல்லும் அளவிற்கு சாதனை படைத்துள்ளார் என பலரும் புகழாரம் சூட்டி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.