
விவேக் பட பாணியில் மைல் கல்லுக்கு பூஜை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வித்தியாசமான முறையில் மைல் கல்லுக்கு பூஜை.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த , மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய மாநில தேசிய நெடுஞ்சாலை தோப்பூர் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஊழியர்கள் வித்தியாசமாக மைல் கல்லுக்கு (எல்லை கல்) , சந்தனம் பூசி , கதம்ப மாலைகள் அணிவித்து, குங்குமப் பொட்டிட்டு, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, சூடம் , பத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை வாழையிலையில் படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு (எல்லை கல்) பூஜை கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி புது விதமான பூஜையை எங்கள் ஊர் மக்கள் மட்டுமே வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள் என அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் பேசி செல்கின்றனர்.

எப்படியும் பூமி பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயபக்தியுடன் மைல் கல்லுக்கு (எல்லை கல்) பூஜை கொண்டாடி அசத்திய நெடுஞ்சாலை பணியாளர்களின் வித்தியாசமான முறையில் பூஜை செய்தது சரிதான். ஆனால் மைல் கல்லில் உள்ள ஊர் பெயரையும், கிலோ மீட்டர் எவ்வளவு உள்ளது என அடையாளப்படுத்தும் எழுத்துகளை மறைத்து பூஜை செய்து சாமி கும்பிட்ட செயல் பலரும் முகம் சுழித்துக் கொண்டு பயணிக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.