மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கால்வாய் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து பணி தொடக்கம்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் 3 தொகுப்புகளாக சுமார் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து பணி பூஜையுடன் துவங்கியது.

நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் , பிரதான கால்வாய்,நீட்டிப்புகால்வாய், ஆறாவது கிளை கால்வாய், உள்ளிட்டவை மூன்று கட்டங்களாக தலா ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கிராமத்து பணி பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் அன்பு செல்வம் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அன்பரசன் வரவேற்றார். உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், சேகரன், மதுரை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பிடி மோகன், முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி, முன்னாள் கவுன்சிலர் மூக்கன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!