மதுரையில் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த வங்கிக் காவலர் திடீர் சாவு!

துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த வங்கிக் காவலர் திடீர் சாவு!

மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் விதியை சேர்ந்த ராஜேந்திரன் முன்னாள் ராணுவ வீரர் 23 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தனியார் வங்கியில்
பாதுகாவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தனியார் வங்கியில் 20 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை இதனால் துப்பாக்கியை ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில் துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்யும் பொழுது தவறுதலாக கைப்பட்டு வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டார். இதை அறிந்த குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார் இதனால் தகவல் அறிந்த கரிமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கரிமேடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் இதனால் அப்ப பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!