
திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு மாட்டுத்தொழுவத்தில் தவளையை விழுங்கிய 7 அடி சாரைப்பாம்பு பிடிபட்டது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1 வது ஊராட்சி கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் கோவில் அருகே கருப்பையா மனைவி ராஜாத்தி என்பவர் தனது வீட்டின் அருகே பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.
இன்று காலை 11 மணியளவில் பசுமாடுகளுக்கு தீவனம் வைக்கச் சென்ற பொழுது வேப்ப மரத்தின் அடியில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்ததை பார்த்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருநகர் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவை தொடர்பு கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு தவளையை விழுங்கிக் கொண்டிருந்த நிலையில் 7அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக மீட்டு நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.