மதுரை கூத்தியார்குண்டு சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

மதுரை கூத்தியார்குண்டு சாலையில் அ ஊட்டியில் இருந்து தென்காசிக்கு கேரட் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சதீஸ் (வயது 37) என்பவர் 2 டன் எடை கொண்ட கேரட் மூட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குலத்திற்கு ஓட்டி சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நான்கு வழிச் சாலை கூத்தியார்குண்டு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக சரக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் ஷேர் ஆட்டோ மீது மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக சதீஷ் உயிர் தப்பினார்.

இதில் தோப்பூரை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் சிவா காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை மீட்புக் குழுவினர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனத்தை கிரேன் மூலம் மீட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக ஆஸ்டின் பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!