
திருப்பரங்குன்றம் அருகே கால் நூற்றாண்டு காலமாக கிடப்பில் கிடந்த சாலை அமைக்கும் திட்டம்… நிதி ஒதுக்கி – பூமி பூஜை போட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரைக்கு கிழே உள்ள சாலை பழுதடைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 49 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மெட்டல் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில்:
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை பழுதடைந்து இருந்ததால் வயக்காட்டிற்கும் மற்றும் நிலையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கும் சென்றுவர பெரும் அவதிப்பட்டு வந்தோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து இந்த சாலை அமைக்கும் பணியை தொடங்கியதற்கு உருக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள் தெரிவிப்பது மட்டுமின்றி பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறோம் என்று கூறினர்.
இந்த நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருவேலம்பட்டி வெற்றி,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி,
மாவட்ட கவுன்சிலர் ராஜசேகரன்,
கிளைச் செயலாளர்கள் ராஜா கண்ணன், சோணைமுத்து, அய்யனார், முருகன், அக்னி சரவணன், நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ரமேஷ், அய்யங்காளை, ராசு, சோலைமலை, சின்னன், நிலையூர் நித்தியானந்தம், குருமூர்த்தி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.