50 லட்சம் ரூபாய் செலவில் அரசு பள்ளி கட்டிடங்களுக்கான பூமி பூஜை – எம்எல்ஏ ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட வசதியின்றி , அங்குள்ள தகர மேற்கூரையின் கீழ் மண் தரையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மாணவ , மாணவியர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் , இது குறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், இத்தொகுதியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 50 லட்சம் செலவில் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது .இந்த கூடுகள் கட்டிடம் இரண்டு தளங்களாக கட்டப்படுவதால் மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைத்து பாதுகாப்புடன் மாணவ, மாணவியர்கள் கல்வி பயில பெரிதும் பயனுள்ளதாக அமையும். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டி அளித்த ராஜன் செல்லப்பா, கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தோர்தலில் , அதிமுக தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகிய இருவர் திமுக கூட்டணியில் இணைந்ததாலேயே ஏற்பட்டது என குற்றம் சாட்டினார்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!