மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்ற போது அய்யனார் கோயில் அருகே கண்மாய் கரையில் மனித எலும்புக்கூடுகள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்., கரை ஒதுங்கிய மனித எலும்பு மண்டை ஓடு, விலா எலும்புகள் கை, கால் எலும்புகள் என ஆங்காங்கே கரை ஒதுங்கியுள்ளது இதை கண்ட பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் இறந்தவர் யார் எப்போது இறந்தார் அல்லது யாரேனும் கொலை செய்து தண்ணீரில் விட்டு சென்றார்களா அல்லது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்டதா என இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எலும்பு கூடுகளை கைப்பற்றி இறந்தவர் ஆணா, பெண்ணா என தடய அறிவியல் சோதனைக்கு ஆய்வு செய்ய கொண்டு சென்றனர்.
நிலையூர் கண்மாயில் எலும்பு கூடுகள் கரை ஒதுங்கிய நிலையில் இப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.