ஓபிஎஸ் நடத்திய மாநாடு: திமுக பினாமி மாநாடு! அதிமுக கொடி – நீதிமன்ற அவமதிப்பு -ஆர்.பி.உதயகுமார்

சோழவந்தான் ஏப்ரல் 25 மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கிளைக் கழகத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமினை முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்தார்.

ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்பு உரை ஆற்றினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வருகிறார்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 30 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டும். சித்திரை திருவிழாவிற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து சிறப்பாக வேண்டும். அவசரக் கதையில் உருவாக்கப்படும் சட்ட மசோதா திரும்பப் பெறுவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சார்பாக வெளிநடப்பு செய்தோம்என்று தெரிவித்தார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ எம்.வி கருப்பையா ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி எம் வி பி.ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு , செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன் வாடிப்பட்டி அசோக், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி, சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டிய ராஜா, ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா சோழவந்தான் ஒன்றியஇளைஞரணி தண்டபாணி 10வது வார்டு செயலாளர் மணிகண்டன் தென்கரை ராமலிங்கம் கச்சிராயிருப்பு முனியாண்டி மன்னாடிமங்கலம் ராமு குருவித்துறை கண்ணுச்சாமி வழக்கறிஞர், காசிநாதன் நம்பிராஜன், பாபு சோழவந்தான் சிவா தியாகு ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன் தகவல் தொழில் நுட்ப அணி சிவா மேலக்கால் காசிலிங்கம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மகாலிங்கம் பாண்டி ராமச்சந்திரன் மதன் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமே

கம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!