சமயநல்லூர் அருகே குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையை மறிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை சமயநல்லூர் அருகே பரவையில் நூற்றுக்கணக்கானோர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு வேலி அமைக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பரவையில் உள்ளது ஏ.ஐ.பி.நகர் பி காலனி. இப்பகுதியில் ஏராளமானோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு சிலர் பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறியும், இப்பகுதியில் ஏராளமானோர் குடியிருப்பதை மறைத்து அந்த பாதையை அடைக்க கோரி அரசுக்கு மனு செய்துள்ளனர்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் அந்த இடத்தில் தடுப்பு வேலி அமைப்பதற்காக வந்தனர். அப்போது, இப்பகுதியில் குடியிருக்கும் ஏராளமானோர் திரண்டு வந்து தாங்கள் வீடுகளுக்கு சென்று வர ஒரே பாதை தான் இருப்பதாக கூறினர். மேலும் இப்பகுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று தான் இப்பகுதியில் வீடு கட்டியிருப்பதாகவும், தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று வரவும், முதியவர்கள் நோய்வாய்பட்டால் இப்பகுதியில் தான் ஆம்புலன்சில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முறையிட்டனர்.

மேலும் வேலி அமைக்காமல் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனையடுத்து இப்பிரச்சனை சட்டரீதியாக, உங்கள் உரிமைகளை கேளுங்கள் என அறிவுறுத்திய அதிகாரிகள், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும், கூறி சென்றனர். இந்த போராட்டத்தில் ஏ.ஐ.பி.ஐ.ஏ. நகர் பி. காலனி குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள், மாடசாமி, ரவி, சவரிமுத்து, மோகன், பா.ஜ.க. நிர்வாகிகள் ரமேஷ், ஜெகன், மற்றும் ஏராளமான குடியிருப்பு வாசிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!