
விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
மதுரை வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து முறையாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ), வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்றத்திற்கு எதிராகவும் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அருகில் உள்ள மதுரை – திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.