தமிழகத்தில் கோடை வெயில் காலம் தொடங்கியதிலிருந்து மதுரையில் சுமார் 90 டிகிரியில் இருந்து 100 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலையிலிருந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக அடித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பசுமலை, பைக்கரா அழகப்பன் நகர், பழங்காநத்தம், வசந்த நகர், ஆண்டாள்புரம், நேரு நகர், பைபாஸ் சாலை, காளவாசல் குரு தியேட்டர், மாடக்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர் ஆகிய சுற்றுப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த நிலையில் மதுரை நிலையூர் கூத்தியார்கூண்டு, மாடக்குளம் நேரு நகர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ் கட்டிகளை கையில் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.