திருப்பரங்குன்றத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.

திருப்பரங்குன்றத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்களுடன் மரக்கன்றுகளை வழங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து அமிக்கா ஹோட்டல் சார்பாக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புவி வெப்பமடைவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மரங்களை வளர்க்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து பெரிய ரத வீதி சன்னதி தெரு வழியாக பதினாறுகால் மண்டபம் சென்றடைந்தது.

நிகழ்ச்சியில் அமிக்கா ஹோட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இதில் அமிக்கா ஹோட்டல் மேலாளர் கண்ணன், நிதிமேலாளர் அருண் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!