உசிலம்பட்டி அருகே போலி மருத்துவர் கைது

உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி மருந்தகம் மற்றும் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமன்னன். இவர் அதே ஊரில் அனுமதியின்றி மருத்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் இன்று உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் செல்வராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பாப்பாபட்டி கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில்அனுமதியின்றி மருந்து கடையும், ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்த அதிமன்னனை கையும் களவுமாக பிடித்து உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டதாரியான அதிமன்னன். ஆங்கில மருத்துவம் பார்த்தது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., போலியாக மருத்துவம் பார்த்தாக கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக போலிசார் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்களும் இது போன்ற கிராமப்புறங்களில் உள்ள போலி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், போலி மருத்துவம் பார்க்கும் நபர்கள் குறித்து தகவல் அளித்தால் விரைந்து நடவடிக்கைகள் எடுப்போம் என உசிலம்பட்டி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!