தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.
இக்கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வரும் அண்மையில் 15 நாட்களாக நடந்து வந்த பங்குனி பெருவிழாவில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்று பங்குனி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவிலில் அமைந்துள்ள திருவாட்சி மண்டபத்தில் தங்கத் தேர் புறப்பாடு நடந்தேறியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்தனர். இதில் திருக்கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாட்சி மண்டபத்தில் பவனி வந்த தங்கத்தேரில் சுவாமி மற்றும் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.