
திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த காரில் திடீர் தீ – காரில் பயணித்த கைக்குழந்தையுடன் நான்கு பேரும் வெளியேறியதால் விபத்து தவிர்ப்பு – 30 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கார் சாம்பல் ஆனது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து சின்ன ராஜா என்பவருக்கு சொந்தமான காரை, அவரது மைத்துனர் மணிமாறன் என்பவர் குடும்பத்தினருடன் சிவகாசி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, கப்பலூர் மேம்பாலத்தில் காரின் முன்புறம் திடீரென கரும்புகை கிளம்பியதால், காரில் இருந்த கைக் குழந்தையுடன் இரண்டு பெண்கள் மற்றும் காரை ஓட்டி வந்த மணிமாறன் ஆகியோர் காரில் இருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து பற்றி எரிந்த தீ பரவியதால், அங்கு சிறிது பதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான திருமங்கலம் தீயணைப்பு துறையினர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விபத்து & மீட்பு குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் 30 நிமிடமாக போராடி அணைத்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எறிந்து எலும்புக் கூடாக காட்சி அளித்தது. இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.