திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து!

திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து!

திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி அவர்களின் பிறந்தநாளன்று அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர்.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அமைந்துள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்க்கப்பட்டோர்கள் மற்றும் முதியோர்களை பாதுகாக்கும் மையமான அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் அறுசுவை உணவு வழங்கி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது திருப்பரங்குன்றம் போட்டோ கார்த்தி தலைமையில் நடைபெற்றது. உடன் மோகன் மற்றும் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!