மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் , ஆலம்பட்டி என்ற இடத்தில் திருமங்கலம் வட்ட வழங்க அலுவலர் வீரமணி , ரோந்து பணியில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் 2.5 டன் (50 மூடை) ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. வண்டியை மடக்கி பிடித்தபோது, ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் வீரமணி, டிரைவர் ஒருவரை நியமித்து அரிசியுடன் வாகனத்தை திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.மேலும் ரேஷன் அரிசி எங்கு, எங்கிருந்து கடத்தப்படுகிறது? யார் என்பது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.