மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர்.. தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை.

மதுரை ஆணையாளர், மதுரை மேயர், நிதி அமைச்சர் ஆகியோரிடம் மதுரை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று கோரிக்கை மனு!

மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டக் கோரி மதுரை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சர்பில் இன்று (2.12.2022) வெள்ளிக் கிழமைக் காலை 11.00 மணிக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் (இ.ஆ.ப.) அவர்களிடமும், மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்களிடமும் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு தமுக்கம் கலையரங்கத்தில் நிறுவப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் திறப்பு விழா கல்வெட்டு நகலை ஆணையரிடமும், மேயரிடமும் அளித்து சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் வரலாறு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

அது போல், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனி வேல் ராசன் அலுவலத்திலும் நேரில் சென்று மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் ஆனந்தன், மகளிர் ஆயம் தலைவர் அருணா, த.தே.பே. மாநகர் செயலாளர் கதிர்நிலவன், ரெ.இராசு, கலைவாணன், மலையரசன், மேரி, இராசா கிருட்டிணன், மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!