
1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய நாவலர் சோம சுந்தர பாரதியார் நினைவு நாளையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் , நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கதிர்நிலவன் (மதுரை மாநகர் செயலாளர், த.தே.பே.) முருகன் (நாம் தமிழர் கலை பண்பாட்டுப் பாசறை) , ஆறுமுகம், மருது ( நாம் தமிழர் கட்சி ), கரிகாலன், கலைவாணன் , மலையரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.