இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் கட்டாலங்குளம் அரசருமாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்து கோன். இவரது 265 வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வீடு திரும்புகையில் வாகனம் கவிழ்ந்து விபத்து.
முதல் சுதந்திரப் போராளி:
தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன் ஆவர் . அவர் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.
பிரிட்டிஷ் மற்றும் மருதநாயகம் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டார் . தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். மாவீரன் அழகுமுத்துக் கோன் 1759 இல் பீரங்கியின் மூலம் கொல்லப்பட்டார்.
வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளார்
மாவீரன் அழகுமுத்து கோன். இவரது 265 வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக கட்டாலங்குளத்தில் குருபூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாகன விபத்து:
இந்நிலையில் கட்டாலங்குளத்தில் குருபூஜையை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்குவழிச்சாலையில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தில் பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த 11 பேர் அமர்ந்து வந்த மற்றொரு வாகனம் தடம் புரண்டு எதிரே உள்ள சாலையில் கவிழ்ந்து விபக்குள்ளானது. இதில் பலத்த காயத்துடன் நூலிலையில் உயிர்தப்பினர். காயம் ஏற்பட்டவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தது என முதற்கட்ட விசாரனையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் விசரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.