கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், கிராம மக்களுக்கு 4 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் இயந்திரம் அர்ப்பணம்.

  
       மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினர்,  கப்பலூர் கிராம மக்களுக்காக ரூபாய் 4 லட்சம் மதிப்புடைய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய இயந்திரத்தை கிராம மக்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளனர் .மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்ய வேண்டியும்,  அதற்கான முழு பொறுப்பையும் டோல்கேட் நிர்வாகம் பஞ்சாயத்து தலைவரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கப்பலூர் கிராம மக்கள் சார்பில்,  சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் கிராமத்தை தத்தெடுக்க வேண்டியும், அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரக் கோரி மனு அளித்தனர்.இவ்விழாவில், கப்பலூர் டோல்கேட் நிர்வாக தலைவர்.கர்ணா (CUBE Highways), அம்பத்தி சீனிவாச கிரண்குமார் (plant Head) ரவிபாபு, டோல்கேட் மேலாளர், கப்பலூர் உட்பட அனைத்து சுங்கச்சாவடி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!