மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு அவசர ஊர்தி மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற செல்லூர் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.