கொள்ளை போகும் குமரியின் கனிமவளம்! கேரளாவிற்கு கடத்த துணை போகும் தமிழக அரசு! நாம் தமிழர் கண்டன பொதுக்கூட்டம்!

குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும், மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள் மட்டும் உள்ளூர் மக்கள் கட்டுமான தேவைகளுக்கு குறைந்த விலைக்கு அரசே வழங்க கோரி கண்டன பொதுக்கூட்டம்

மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள் மட்டும் உள்ளூர் மக்கள் கட்டுமான தேவைகளுக்கு குறைந்த விலைக்கு அரசே வழங்க கோரியும்

குமரி மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளில் அதி சக்திவாய்ந்த மின்னணு வெடிபொருள்கள் பயன்படுத்தி மலைகள் உடைக்கப்படுகிறது, இதனால் அருகிலிருக்கும் வீடுகள் ,பாலங்கள் , சாலை போன்றவை அதிர்வால் பிழவுபடுகிறது. வன உயிரினங்கள், நிலத்தடி நீர், விவசாய நிலங்கள், தாவரங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்படைகிறது, குவாரிகளிலிருந்து வெளிவரும் தூசிமண்டலத்தால், சாலைகளில் பயணிப்போர், விவசாய நிலத்தில் பணிபுரிவோர், விவசாய விளைபயிர்கள், அருகிலிருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிப்படைகின்றனர், பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல் மற்றும் இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. மேலும் தற்போது இயக்கப்படும் குவாரிகள்
அரசின் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளமையால் முறையான ஆய்வு நடத்தி மலைகளை முறைகேடாக உடைக்கும் குவாரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும்.


கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பாறை கற்கள், சல்லி, M Sand, P Sand , மணல், செங்கல் போன்ற சிறுகனிமவளங்களை கேரளா உட்பட வெளி மாநிலத்திற்கு எடுத்து செல்வதை மாவட்ட எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகளை வலுப்படுத்தி கனிமவளக்கடத்தல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும் .
இதன்பொருட்டு அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து
கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துதல் மற்றும் முறைகேடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“மண்ணின் வளங்கள் மண்ணின் மக்களுக்கே” என்ற அடிப்படையில் மலைகள் மற்றும் சூழலியலுக்கு எவ்வித பாதிப்புமின்றி குழிப்பாறைகள் ( தரைமட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகள் ) மட்டும் குறிப்பிட்ட அளவோடு எடுத்து உள்ளூர் கட்டுமான பயன்பாட்டிற்கு
குறைந்த விலைக்கு அரசே வழங்க வேண்டும்.

கேராளாவிற்கு கனிம வளங்கள் கடத்துவதை கண்காணித்து தடுக்கும் விதமாக  கனரக வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி புறப்படுமிடம்,சேருமிடம்,எடையளவு, அதன் மதிப்பு போன்ற தகவல்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்து, அரசின் விதிமுறைகளை மீறிய மற்றும்   அளவிற்கு அதிகமாக பாறைகளை உடைத்து கடத்திய 
குவாரி உரிமையாளர்களது  உரிமத்தை ரத்து செய்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவர்களுக்கு  துணை போன அரசு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கனிமவளங்களை எடுத்துச்  செல்வதால்  சாலைகள் பழுதடைவதோடு  விபத்துகளும் நேரிடுவதால் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களையும் அதில் இருக்கும் பொருட்களையும் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து குவாரி உரிமையாளர் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் மீது குற்றவியல்  நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதோடு பழுதடைந்த சாலைகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் செப்பனிடப்பட வேண்டும்.

சுருளகோடு அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஒரு சோதனை சாவடி நிறுவ வேண்டும்.
சித்திரங்கோடு மற்றும் பொன்மனை அரசு சோதனைசாவடி முறையாக இயங்காததால் இரவு நேரங்களில் கனிமவள கடத்தல் நடைபெறுகிறது. எனவே தடிக்காரன்கோணம் சோதனைசாவடி நடைமுறை போன்று சித்திரங்கோட்டிலும் பொன்மனையிலும் இரவு நேரங்களில் சோதனை சாவடியை மூடி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணிவரை முறைகேடாக கிரசர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டுக்கொண்டிக்கின்றன. இந்த முறைகேடுகள் தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக சித்திரங்கோடு காயல்கரை பகுதியில் செயல்படும் RRM Blue Metals குவாரி, வலியாற்றுமுகம் SA குவாரி மற்றும் அனுமதியின்றி இயங்கும் காயல்கரை பால்ராஜ் குவாரி போன்றவை 24 மணி நேரமும் முறைகேடாக இயங்குகிறது.

கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல் மலையின் ஒருபகுதியான புதுகாடுவெட்டிவிளையில் உள்ள கல்குவாரி அரசின் விதிமுறைகள் முற்றிலும் மீறி இயக்கப்படுவதால் அதனை நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.

கல்குவாரிகளில் போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்து மரணங்கள் குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதுபோன்ற கோரிக்கைகளுடன் குமரி மாவட்டம் சித்திரங்கோடு சந்திப்பில் 10.5.2023 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஹிம்லர் சிறப்புரை ஆற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சசாட்டை துரைமுருகன்.( மாநில கொள்கை பரப்பு செயலாளர் )ஹிம்லர்( மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!