குமரியில் அதிசயம்: காந்தி ஜெயந்தியன்று மட்டும் விழும் சூரிய ஒளி! நீங்களும் அந்த அதிசயத்தை காணலாம்.

காந்தி ஜெயந்தியான இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அதிசய சூரிய ஒளி பட்டது.

காந்தி ஜெயந்தி தினமான இன்று, கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் அதிசய சூரிய ஓளி பட்டது. இதனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கோட்சே என்பவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருடைய அஸ்தி நாட்டின் பல இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டது. முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் கரைத்தப் பின், அவரது நினைவாக அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த நினைவு மண்டபத் துக்கு 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி ஆச்சாரியாகிருபளானியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த மண்டபம் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ்.ராவ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மரணம் அடையும் போது அவரது வயது 79. அவரது வயதை குறிக்கும் வகையில் இந்த மண்டபம்79அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நினைவு மண்ட பத்தில் உள்ள காந்திஅஸ்தி கட்டடத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்த நினைவு மண்டபத்தில், ஒவ்வொரு வருடமும் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி சூரிய ஒளி விழும் அதிசயம் நடந்து வருகிறது. இதே போல், இன்றும் காந்தி ஜெயந்தி தினத்தன்று காந்தி நினைவு மண்டபத்தில் அதிசய சூரிய ஒளி விழுந்தது. இதனை பொதுமக்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரகிரண் பிரசாத், எம்.பி வசந்த விஜய்., நாகர்கோயில் மாநகராட்சி மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!