
பழனியில் நடந்தது என்ன? பாராட்டு மலையில் நனையும் சிவனடியார்கள்… 3-வது படை வீட்டை ஸ்தம்பிக்க வைத்த அந்த 6 ஆயிரம் பேர்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆயிரக்கணக்கான சிவனடியாா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இந்த திருவிழா மார்ச் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, படிப்பாதை, யானைப் பாதை, கிரிவலப் பாதை, மலைக் கோயில் மேல் பிரகாரம், மலைக் கோயில் வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவனடியாா்கள் உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் முதற்கட்டமாக நேற்று மட்டும் அனைத்து சிவனடியார்கள் குழு சார்பில் 6,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ரயில், பேருந்துகள் மூலம் அங்கு வந்துள்ளனர். இவா்கள் படிப்பாதையில் உள்ள சிறிய கோயில்களில் சிற்பங்களை தூய்மை செய்யும் பணி, படிப்பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி, மலைக் கோயில் வனப்பகுதிகளில் உள்ள நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகியப் பணிகளை செய்து வருகின்றனா். இவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சுக்கு காபி மோர் மற்றும்மூன்று வேலைகள் உணவு வழங்கப்பட்டது. மேலும், பழநி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை என்றும் உழவாரப் பணிகள் நடைபெற உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.