
கடலூா் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில் கோபுரங்களில் ஆக.15-ஆம் தேதி தேசியக் கொடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியா் அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். நாட்டின் 76-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் இயங்கக்கூடிய கடலூா் பாடலீஸ்வரா், திருவந்திபுரம் தேவநாத சாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரா், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா், திட்டக்குடி வைத்தியநாதா் கோயில் கோபுரங்களில் தேசியக் கொடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.