
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன், இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா.
அவர் 2020ல் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதே வருடத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் performance சரியில்லை என இணையத்தில் கடும் ட்ரோல்கள் வந்தது. மனைவி நடாஷா ஒரு போட்டியை காண கூட ஸ்டேடியம் வரவில்லையாம்.
விவாகரத்தா?
சமீப காலமாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் இன்ஸ்டாவில் தாங்கள் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிடுவதில்லை. மேலும் பிறந்தநாள் அன்று கூட பதிவு எதுவும் வரவில்லை.
Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் பெயர் வைத்து இருந்த அவர், தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கிவிட்டார். மேலும் ஒன்றாக இருந்த போட்டோக்களையும் நீக்கி இருக்கிறார்.
அதனால் அவர்கள் விவாகரத்து செய்கிறார்களா என இணையத்தில் பேச்சு எழுந்து இருக்கிறது.
இருப்பினும் இது பற்றி அவர்கள் என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.