வாடிவாசல் கதை பிடிக்கவில்லை! நடிகர் விஜய்யால் இயக்குனர் வெற்றிமாறன் மீது கடும் கோபத்தில் சூர்யா..

வாடிவாசல்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்காமல் இருக்கிறது. இதனால் இப்படம் கைவிடப்பட்டு விட்டது என பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை படம் விரைவில் உருவாகும் என வெற்றிமாறன் தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இப்படியிருக்க இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவிற்கு தெரியாமல் வாடிவாசல் திரைப்படத்தின் கதையை தெலுங்கு நடிகர் ராம் சரணிடம் சமீபத்தில் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கதை பிடிக்கவில்லை

ஆனால், கதையை கேட்ட நடிகர் ராம் சரண் எனக்கு இந்த கதை பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம். வெற்றிமாறனின் கதை ஒரு ஹீரோவிற்கு பிடிக்காமல் போய்விட்டதா என இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வாடிவாசல் கதை பிடிக்கவில்லை! நடிகர் விஜய்யால் இயக்குனர் வெற்றிமாறன் மீது கடும் கோபத்தில் சூர்யா.. | Suriya Gets Angry On Vetrimaaran

கடும் கோபத்தில் சூர்யா

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூர்யா, வெற்றிமாறன் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும், இதனால் படத்திலிருந்து வெளியேற அவர் முடிவு செய்துள்ளதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். அதே போல் வெற்றிமாறன் மீது மற்றொரு வகையில் சூர்யா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் கதை பிடிக்கவில்லை! நடிகர் விஜய்யால் இயக்குனர் வெற்றிமாறன் மீது கடும் கோபத்தில் சூர்யா.. | Suriya Gets Angry On Vetrimaaran

அது என்னவென்றால், சமீபகாலமாக இயக்குனர் வெற்றிமாறன் செல்லும் இடங்களில் அவர் விஜய்யை பற்றி சிலாகித்து பேசுவது சூர்யாவிற்கு பெரிதும் பிடிக்கவில்லையாம். இதனால் வெற்றிமாறன் மீது அதிருப்தியில் இருக்கிறாராம் சூர்யா. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!