
சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மாஸ் அப்டேட்.. அறிவிப்பு வீடியோ இதோ
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் நிறுவனம் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக நடிக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் டீசர் ஒன்று வெளிவந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் இராணுவ வீரராக நடித்துள்ள சிவகார்த்திகேயன் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அறிவிப்பு வீடியோ
அமரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது என ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளனர். அதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.