மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கோவில் முன்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திங்களன்று காலை மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர் இதில் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், செந்தில் ,மயில் ,பி கே எம் ராஜா ,பூசாரி சேகர் ,கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உற்சவ விழாவில் வெள்ளியன்று மாலை வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுக்கும் நிகழ்வும் அம்மன் ஊர்வலத்துடன் முளைப்பாரி ஊர்வலமும், பக்தர்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் அக்னி சட்டி பால்குடம் நிகழ்வும். நடைபெற உள்ளது.
செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.