பிரபல நடிகர் மரணம்… அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் திரையுலகம்!


2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் வெண்ணிலா கபடிக்குழு.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் அவருடன் அப்புக்குட்டி, முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தார்கள். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களுள் ஒருவராக நடித்தவர் நடிகர் மாயி சுந்தர்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக் கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த இவர், அண்மையில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான கட்டா குஸ்தி படத்திலும் நடித்திருந்தார்.
மன்னார்குடியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இப்படத்தில் நடித்திருந்த மதுரையைச் சேர்ந்த நடிகர் ஹரி வைரவன் அண்மையில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!