
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்’. UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். KGF பின்னணியில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் ஒத்திகையின் போது விக்ரமிற்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயம் முழுமையாக சரியாகும் வரை சிறிது காலத்திற்கு தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. இதற்கிடையில், விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்டு வருகிறது.
விபத்தை அறிவித்த விக்ரமின் மேலாளர், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுக்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து PS2-வுக்கு கிடைக்கும் வியக்க வைக்கும் வரவேற்புக்கும் விக்ரம் தனது நன்றிகளை பகிர்ந்துள்ளார் எனவும் பகிர்ந்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.