
இந்தியத் திரைப்படத்தின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான R.வேல்ராஜ் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.
ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தனுஷ் – சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கிய இவர், அசுரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து JSB சதிஷ்குமார் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், மெர்லின்’, ‘அசுரகுரு’ ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த VIP, தங்கமகன் பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.