சிம்புவின் திருமணம்… பத்து தல படம் வெற்றிபெற தேங்காய் உடைத்து கூல் சுரேஷ் வழிபாடு!

பத்து தல திரைப்படம் வெற்றிபெற மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து கூல் சுரேஷ் வழிபாடு

திரைப்பட நடிகர் சிலம்பரசன்(STR) நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தி 108 தேங்காய் உடைக்க வேண்டிக்கொண்டார். தொடர்ந்து காவல்துறை அனுமதி வழங்காததையடுத்து சில தேங்காய்யை மட்டும் கோவில் வடக்கு கோபுரம் அருகே உடைத்தார். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் கூல் சுரேஷ் உடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதன் பின்னர் COOL சுரேஷ் கூறும் போது: பத்துதல திரைப்படம் வெற்றி பெற வேண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்றார்.

நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு; ஸ்ரீலங்கா பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கபோவதாகவும், திருமணம் நடந்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது, ஆனால் நடிகர் சிம்புவிற்கு திருமணம் ஒன்று நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும். அப்படியாகவே டி. ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார் என்று கூறினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை

மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!