2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி மேதகு படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமான மேதகு 2 வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேதகு 2தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம்
மேதகு படத்தின் முதல் பாகத்தில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து மேதகு 2 பல்வேறு நாடுகளில் திரையரங்குகளிலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்ஸ் ஓடிடி(Tamils OTT) ஒடிடி தளத்திலும் ஆகஸ்ட் 28ம் தேதி மூவி வுட் ஓடிடி தளத்திலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நடந்த தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையும், கருப்பு ஜூலை கலவரத்தையும், ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா காந்தியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் , பழ . நெடுமாறன் , புதுக்கோட்டை பாவண்ணன், வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவும் எம்.ஜி.ஆர் கோடிகளை அள்ளிக் கொடுத்த விதமும் சொல்லப்படுகிறது. மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த மேதகு 2 படம் முடிகிறது.

அதேபோல 1981ஆம் ஆண்டு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவமும் இதில் இடம்பெற்றுள்ளது. கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பிரவின் குமார் இசையமைத்துள்ளார். வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.தமிழர்களின் வரலாறு உலகம் அறியக்கூடாது என பல்வேறு சதி திட்டங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர்களின் பெயர் ஆதரவோடு மேதகு 2 திரைப்படம் வெளியாகி தற்போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
மேதகு 2தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.