
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காமெடி கிங் மதுரை முத்து அவர்களின் ஏற்பாட்டில் நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, யாழ் இசைக் குழு துவக்க விழா, நட்சத்திர இசை மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் நடிகர் ராதாரவி, இயக்குனர் சீனுராமசாமி, விஜய் TV புகழ் ரோபோ சங்கர், ராமர்,புகழ்,ஆண்ட்ரோ, செந்தில் ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ், பின்னனி பாடகர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவர் பா.சரவணன் கட்டுமானத்துறை வல்லுனர் Cedoi ரியாஸ், டெம்பிள் சிட்டி குமார், ஆகியோர் கலந்துகொண்டனர் இதில் இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் பேசியதாவது…..:
நான் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி படிக்கின்ற காலத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் அப்போது கூட எனக்கு பரிசு கிடைக்கவில்லை இருப்பினும் ஆறுதல் பரிசாக கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருப்பேன் ஆனால் எல்லோரும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மட்டுமே எனக்கு கிடைக்கும் அப்பேர்பட்ட சூழ்நிலையை கடந்து பல வருடங்கள் ஆகி இருந்தாலும் அதே இடத்தில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தாக கலந்து கொண்ட எம்.ஆர்.ராதா அவர்களின் மகன் ராதாரவி அவர்களின் கரங்களாலும், மதுரை முத்து அவர்களின் ஞானீசை குழுவின் இசையும் நகையும் என்ற நிகழ்ச்சியின் வாயிலாகவும் விருது பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் தர்மதுரை படப்பிடிப்பின் போது அருகில் உள்ள மருத்துவ கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடத்தினேன். அப்போது இரவு 2 மணிக்கு கிரேனில் இருந்து பார்த்த போது ஆட்கள் இன்றி வெறிச்சோடியாக காணப்பட்ட இந்த இடம் தற்போது ஆயிரம் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந்த காந்தி மியூசியத்தை பார்ப்பதை நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
சினிமாவில் வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரணம் கிடையாது. நாம் எடுத்த படம் வெற்றி என்றால் நம்முடன் நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் கூட போன் செய்ய மாட்டார்கள் அப்படிப்பட்ட கலை துறையில் தன்னோடு பயணிக்கின்ற எல்லா கலைஞர்களையும் சொந்த மண்ணில் ஒன்று திரட்டி அவர்களுக்கு விருது வழங்கிய கவுரவிப்பது தான் ‘மதுரை முத்து ‘ கலைத்தாயின் சொத்து அவரை ‘சிரிப்பின் சிற்பி ‘ என்றே அழைக்கலாம்.

தற்போது எல்லார் வீட்டிற்குள்ளேயும் ஒரு ராமர் வீடு வந்து விட்டது,ராமர் அவர்களின் கலையால் ஒவ்வொரு வீட்டிற்க்குள்ளேயும் நகைச்சுவை கலகம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவர் கமல் ரசிகர், கமல் என்றால் இவருக்கு உயிர், மதுரை நகரின் கருப்பு கமல் என்ற ரோபோ சங்கரை கூறலாம்.
தூய தமிழில் மனதில் உள்ள கருத்தை மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் சேர்க்கக்கூடியவர் ஈரோடு மகேஷ்.
ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் விருது வாங்க வந்த போது தன் தாயுடன் வந்தவர் தம்பி புகழ்.
கோவில்களில் நாட்டுப்புற பாடல் பாடிக்கொண்டிருந்தவரை எனது தர்மதுரை திரைப்படம்- மக்க கலங்குதப்பா பாடல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் மதிச்சியம் பாலா.
நான் விஜய் சேதுபதி வைத்து முதல் படம் இயக்கிய போது,திருமணம் முடிந்த வரை எப்படி கதாநாயகன் நடிக்க வைக்க முடியும் என்று எனது உதவி இயக்குனர்கள் கேட்டபோது, பத்மினி, பானுமதி, எம்.ஜி.ஆர் வந்தவர்கள் எல்லாம் திருமணம் செய்த பின்பு தான் நடிக்க வந்தவர்கள் ஏன் நானே திருமணம் செய்த பின்பு தான் இயக்குனராக ஆனேன் என கூறிவிட்டு விஜய் சேதுபதியை வைத்து இரண்டாவது நாள் படப்பிடிப்பின் போது ஒரு பள்ளிக்கூடத்தில் கதவை திறந்து சண்டை காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது தமிழ் சினிமாவின் கதவை திறந்து விட்டான் என்று நான் விஜய் சேதுபதியை கூறினேன். அப்போது விஜய் சேதுபதி தோலின் மீது கை போட்டு பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க என்று அவர் கூறினார்.
கல்யாணம் முடிந்தால் தான் ஒருவருக்கு அமைதியும்,பக்குவமும் பிறக்கும், கலைத்துறையில் இருப்பவர்களிலேயே தகுதி மட்டுமே பார்க்க வேண்டும் அவருடைய சாதி, மதம் மற்ற எதையுமே பார்க்க கூடாது அப்படி அவரிடம் தகுதியை தவிர மற்ற வேற ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தது என்றால் கலைத்தாய் நம்மை கைவிட்டு விடுவார். எனது அடுத்த படத்தில் மதுரை முத்து அவர்கள் நடிக்கிறார். அந்தப் படத்தின் பெயரை தெரிவிப்பதில் மற்றவர்களைப் போல கண்ணோட்டம், முன்னோட்டம் என கோடிக்கணக்கில் செலவு செய்ய மாட்டேன் ஆகையால் நான் பிறந்த இந்த மதுரை மண்ணில் கூடியிருக்கின்ற மக்கள் மத்தியில் எனது படத்தின் பெயரை தெரிவிப்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று உருக்கமாக உருக்கமாக பேசி “முன் பனி… முதல் மழை” என தனது அடுத்த படத்தின் பெயரை தெரிவித்தார் எதார்த்த இயக்குனர் மற்றும் மக்கள் இயக்குனர் சீனு ராமசாமி. மேலும் எதார்த்த இயக்குனர் என செய்தி தாள்களிலும் தொலைக்காட்சிகளில் மட்டுமே கேள்விப்பட்டோம் ஆனால் இன்று தான் எதார்த்தமான இயக்குனர் என்று நாங்கள் அறிந்து கொண்டோம் என்று அங்கே கூடியிருந்த மக்கள் கை தட்டியும், விசில் அடித்தும் அவரை ஆரவாரம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.