2001ல் செய்ததைப் போல் செய்த அஜித்…ரசிகர்கள் மனதில் தோன்றிய அந்த “செயல்” என்ன தெரியுமா..?

  • எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
  • இதனிடையே மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘ஏகே 61’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார். நேற்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற பின்னர் ரைபிள் கிளப் மாடியில் இருந்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து அவரை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அவரை பார்க்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பியும் நடனம் ஆடியும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களை கண்டு உற்சாகம் அளித்ததை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் கடந்த 2001ம்ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்து பொதுமக்களை கண்டு கையசைப்பார், அந்த சீனும் இன்று அஜித் திருச்சியில் மாடியில் நின்று கையசைத்து இரண்டு கைகளையும் தூக்கி வெற்றிக்குறி போல் காண்பித்தது சிட்டிசன் படத்தை நினைவூட்டுகிறது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!